முகப்பு
நூல் அரங்கம்

ரா

'ரா'-வை முன்னிறுத்தி நடைபெற்ற அரசியல்; 'ரா'-வில் பயன்படுத்தப்படும் சங்கேத வார்த்தை, 'ரா'-வின் சாகசங்கள் மற்றும் சறுக்கல்கள் உள்ளிட்ட பொதுவெளியில் அதிகம் அறியப்படாத பல்வேறு தகவல்களை இந்நூல் பதிவு செய்துள்ளது.

Updated On : 23 மார்ச், 2026 at 12:31 PM
பகிர்:

ரா - இந்திய உளவுத் துறையின் கதை-நன்மாறன் திருநாவுக்கரசு; பக்.208; ரூ.250; கிழக்கு பதிப்பகம், சென்னை-600 014, ✆ 044-4200 9603.

ஒரு நாட்டின் உளவுத் துறை என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக, எந்த சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்படாமல், அந்நிய நாட்டுக்குள் ஊடுருவி உளவுத் தகவல்களைச் சேகரிப்பதுதான் என்று கருதப்படுகிறது. ஆனால், யதார்த்தம் இன்னும் ஆழமானது என்கிறார் நூலாசிரியர்.

பிற நாடுகளில் ஒற்றறிதலுடன், அந்நாட்டில் குழப்பத்தை விளைவித்தல்; ஆட்சிக் கவிழ்ப்பு; அதிகார துஷ்பிரயோகம்; ஊழலை ஊக்குவித்தல் உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபடுகின்றன. இதற்கு இந்திய உளவு அமைப்பான 'ரா' வும் விதிவிலக்கு அல்ல என்பதை விறுவிறுப்புடன் விவரிக்கிறது இந்நூல்.

ஒட்டுமொத்த தேசத்தின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட இந்திய உளவு அமைப்பு, அரசியல் சதுரங்கத்தில் சிக்கி மற்றொரு சுரண்டல் அமைப்பாக மாறியுள்ளது என்பதை இந்நூல் வெளிச்சம் போடுகிறது. இதில் விசித்திரம் என்னவெனில், 'ரா' கதையை உலகறியச் செய்தது வேறு யாருமல்ல, அதன் அதிகாரப் பிடியால் பாதிக்கப்பட்ட முன்னாள் அதிகாரிகள்தான்.

சீனா, பாகிஸ்தான் உடனான போருக்குப் பிறகுதான் 'ரா' தோற்றுவிக்கப்பட்டது என்றாலும், காலனிய ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவில் உளவு அமைப்பு செயல்படத் தொடங்கியது.

'ரா'-வை முன்னிறுத்தி நடைபெற்ற அரசியல்; 'ரா'-வில் பயன்படுத்தப்படும் சங்கேத வார்த்தை, 'ரா'-வின் சாகசங்கள் மற்றும் சறுக்கல்கள் உள்ளிட்ட பொதுவெளியில் அதிகம் அறியப்படாத பல்வேறு தகவல்களை இந்நூல் பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.