முதல் சபாநாயகர் ஜெ. சிவசண்முகம் பிள்ளை வரலாறு
சட்டப் பேரவைத் தலைவராக இருந்தபோதும், அவர் எளிமையாக இருந்ததும், சைக்கிளிலும், நடந்து சென்றதும் படிக்கும்போது இன்றைய அரசியல்வாதிகளுக்குப் படிப்பினையாக இருக்கும்.
முதல் சபாநாயகர் ஜெ. சிவசண்முகம் பிள்ளை வரலாறு- கவிஞர் எழிலிறைவன், முருகு.சுந்தரேச.புனிதவதி; பக். 120; ரூ. 150; பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்க வெளியீடு, சென்னை-600 021, ✆ 99622 14491.
விடுதலைக்குப் பிந்தைய தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவைத் தலைவராகவும் (1951-55), சென்னையின் முதல் மேயராகவும் (1937-38), வேறு பல பொறுப்புகளிலும் திறம்பட செயலாற்றிய ஜெ. சிவசண்முகம் பிள்ளையின் முழு வரலாற்று நூல் இது. 1901-ஆம் ஆண்டு பிப். 24-ஆம் தேதி பிறந்த இவர், 1975-ஆம் ஆண்டு பிப். 1-ஆம் தேதி மறைந்தார்.
காங்கிரûஸ சேர்ந்த இவர், பட்டியலினத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர். இந்த நூலை 1990-ஆம் ஆண்டில் சிறப்பாக எழுதி வைத்திருந்த அவரது மகள், சிவசண்முகம் பிள்ளையின் 125-ஆவது பிறந்த ஆண்டில் பதிப்பித்திருக்கின்றார்.
Advertisement
ஆங்கிலேயர் மாளிகையில் நேர்முக உதவியாளராகப் பணியாற்றி வந்த ஜெகன்னாதன்-ஜெயலட்சுமி தம்பதியின் மகனாகப் பிறந்தவர் சிவ. சண்முகம். இவரது கல்விப் பணி, இளமை வாழ்க்கை, மகாஜன சபை, சமுதாயத் தொண்டு, தமிழ் இலக்கியப் பணி, நூலாசிரியர், பொதுவாழ்க்கைப் பணி, கோயில்கள் நுழைவு, தமிழக அரசியல், ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களுடனான நட்பு, சட்டப்பேரவையில் அவரது சாதுர்யம், ஏழைகளின் பங்காளனாக இருந்தது என்று அவரது வாழ்க்கை முழுவதும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவைத் தலைவராக இருந்தபோதும், அவர் எளிமையாக இருந்ததும், சைக்கிளிலும், நடந்து சென்றதும் படிக்கும்போது இன்றைய அரசியல்வாதிகளுக்குப் படிப்பினையாக இருக்கும்.
தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், ஏழை எளிய மக்களுக்காகவும் வாழ்ந்ததுடன் பல்வேறு உயர்பதவிகளை வகித்தாலும் எளிமையாகவே வாழ்ந்த அரசியல் தலைவர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு வியக்க வைக்கிறது.