முகப்பு
ஆன்மிகம்

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற பரமபதவாசல் திறப்பில், பெருமாள் ரத்ன அங்கி, பாண்டியன் கொண்டையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள்

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற பரமபதவாசல் திறப்பில், பெருமாள் ரத்ன அங்கி, பாண்டியன் கொண்டையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசித்தனர்.

காரைக்காலில் சுமார் ஆயிரம் ஆண்டுகளு்ககு முற்பட்ட காலத்தில் ஆற்றில் பரிசலில் வந்ததாக கூறப்படும் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள், சயன கோலத்தில் வீற்றிருந்தவாறு கோவில்கொண்டு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் உற்சவராக ஸ்ரீ நித்யகல்யாணப்பெருமாள் உள்ளார்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல்பத்து, இராப்பத்து நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. பகல் பத்து நிகழ்ச்சி கடந்த 14-ம் தேதி தொடங்கி நிறைவடைந்து இராப்பத்து முதல் நாள் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 5 மணியளவில் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ரத்னஅங்கியில் பாண்டியன் கொண்டை உள்ளிட்ட திருவாபரணங்களுடன் பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கோவிலில் உள்ளேயம், வெளியேயும் திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர். நிகழ்ச்சின்போது ஆழ்வார்களுக்கும் அருளப்பாடு நடைபெற்றது.  கோவில் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பரமபதவாசல் திறப்பையொட்டி  வஜ்ராங்கியில் அலங்கரிக்க்பட்டிருந்த மூலவர் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளையும், உற்சவர் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளையும் நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  தரிசனம் செய்தனர். இதேபோன்று காரைக்கால் ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோவிலிலும், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழிவரதராஜப்பெருமாள் கோவில்,  ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கோவில் உள்ளிட்ட வைணவத் தலங்களிலும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று, சுவாமிகள் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் இராப்பத்து நிகழ்ச்சியின் 8வது நாள் திருவேடுபறி உற்சவமும், 10ஆம் நாள் திருவடி தொழுதல் என்னும் மோட்சமும் நடைபெறுகிறது. நிறைவு நாளின்போது இறைப்பா சாற்றுமுறை நடைபெறுகிறது. அப்போது நாலாயிர திவ்யபிரபந்தத்தில் கடைசி ஆயிரத்தை ஒரே நாளில் சேவிக்கப்படவுள்ளது. இவ்வகையில் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து முடிக்கப்படுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஸ்ரீ நித்யகல்யாணப்பெருமாள் பக்தஜன சபாவினர் செய்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →