மிகவும் பழமை வாய்ந்த பதஞ்சலி முனிவரால் பூஜை செய்யப்பட்ட லிங்கம் உள்ள சிதம்பரம் ஸ்ரீஅனந்தீஸ்வரர் கோயில் ரூ.70 லட்சம் செலவில் திருப்பணி மேற்கொள்ள இன்று பூமிபூஜையுடன் தொடங்கி வைக்கப்பட்டது.
பதஞ்சலி முளிவர் ஆன்மார்த்தமாக பூஜை செய்யப்பட்ட திருக்கோயிலாகும். இக்கோயில் சிதம்பரம் நகரின் மேற்கில் நாகச்சேரி குளக்கரையில் அமைந்துள்ளது. அனந்தனாகிய பதஞ்சலி முனிவரால் ஸ்தாபிக்கப் பெற்ற சிவன் இங்கு எழுந்தருளியப்பதால் இக்கோயில் அனந்தீஸ்வரன் கோயில் என பெயர் பெற்றது. இங்குள்ள இறைவன் பெயர் அனந்தீஸ்வரர், இறைவி பெயர் செளந்தரநாயகி. பதஞ்சலி முனிவர் பாதி மனித வடிவமாகவும், பாதி பாம்பு வடிவமாகவும் வடிவம் பெற்று இங்கு அனுக்கிரக மூர்த்தியாக இக்கோயிலில் காட்சி தருகிறார். தில்லை திருநடனத்தை காண அத்திரி முனிவருக்கும், அநசூயைக்கும் மகனாய் தோன்றி தவம் செய்து பாதி மனித உருவரும், பாதி பாம்பு வடிவமும் கொண்டு தில்லையில் வியாக்ரபாதருக்கு நண்பராகி திருமூலட்டநாதரை வழிபட்டு தில்லை அம்பலவனின் அருள் நடனக்காட்சி பெற்றவர் பதஞ்சலி ஆவார்.
இச்சிறப்பு வாய்ந்த கோயில் கடந்த 9-2-1970-ல் குடமுழுக்கு செய்யப்பட்டது. தற்போது தமிழக முதல்வர் உத்தரவின்படி இத்திருக்கோயிலுக்கு திருப்பணி செய்திட 13வது நிதி ஆணைய நிதியிலிருந்து ரூ.70 லட்சம் நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பணி தொடங்குவதற்கான பூமிபூஜை இன்று, காலை 7 மணிக்கு நடைபெற்றது. பூமிபூஜையில் சிதம்பரம் அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் முதல் கல்லை எடுத்துக் கொடுத்து திருப்பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் க.சிவக்குமார், உதவிப் பொறியாளர் காத்தவராயன், நகரமன்ற துணைத்தலைவர் ரா.செந்தில்குமார், மூத்த நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், கோயில் அலுவலர்கள் ராஜ்மோகன், வாசு, வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூமிபூஜையை கோயில் அர்ர்சகர் ராஜாஐயர் செய்து வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.