காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தர்பார்
காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தர்பார் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கொலு தர்பாரை பார்த்துச் செல்கின்றனர்.
காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தர்பார் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கொலு தர்பாரை பார்த்துச் செல்கின்றனர்.
காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை இணைந்து அம்மையார் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தர்பார் அமைத்துள்ளது.
கொலு தர்பாரை சீர்மன்னு கட்டளை தம்பிரான் சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பக்தர்கள் பார்வைக்கு தொடங்கிவைத்து பக்தர்களிடையே உரையாற்றினார். நிகழ்ச்சியில் கோவில் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி, காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் எஸ்.வீரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கொலு தர்பாரில் தனியாக ஸ்ரீ தியாகராஜசுவாமியும், சிவபெருமான் கைலாயத்தில் காட்சியளிப்பதுபோன்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அக்.24-ம் தேதி வரை கொலு தர்பார் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். தினமும் இன்னிசை நிகழ்ச்சியும், சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொலு தர்பார் அமைப்பு மற்றும் நவராத்திரி தினசரி நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை நிர்வாகிகளான அ.பாலசுப்பிரமணியன், தெ.மரகதவேல், வா.ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.