ஆன்மிகம்

நவராத்திரி தொடக்கம்: வழிபாட்டின் இரண்டாம் நாளில்!

நவராத்திரி இரண்டாம் நாளின் அம்பாள் பெயர், உருவ அமைப்பு, குணம், சிறப்பு, நெய்வேத்யம், பூஜை செய்ய சிறந்த நேரம், எந்த நக்ஷத்ரங்களில் பிறந்தவர்கள் வணங்க வேண்டும்

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

நவராத்திரி இரண்டாம் நாளின் அம்பாள் பெயர், உருவ அமைப்பு, குணம், சிறப்பு, நெய்வேத்யம், பூஜை செய்ய சிறந்த நேரம், எந்த நக்ஷத்ரங்களில் பிறந்தவர்கள் வணங்க வேண்டும், எண் ஜோதிடப்படி யாரெல்லாம் வணங்க வேண்டும், எந்த திசை புத்தி அந்தரம் நடப்பவர்கள் வணங்க வேண்டும், எந்த ஜாதக அமைப்பு உடையவர்கள் வணங்க வேண்டும், சொல்ல வேண்டிய மந்திரம், மூல மந்திரம், காயத்ரி போன்ற அனைத்து விஷயங்களும் அடங்கியது.

நவராத்திரி வழிபாட்டு முறை :

அம்பாள்: வராஹி

உருவ அமைப்பு: பன்றி முகம், தெத்துப் பற்கள், சூலம் உலக்கை தாங்கியவள், பெரிய சக்கரத்தைக் கொண்டிருப்பவள், தனது தெத்துப் பற்களால் பூமியை தாங்கியிருப்பவள்

குணம்: குரூரம்

சிறப்பு: ஸ்ரீஅன்னையின் சேனாதிபதி

நைய்வேத்யம்: தயிர்சாதம், பாயாசம்

பூஜை செய்ய உகந்த நேரம்: காலை 9 – 10.30, மாலை 6 – 7.30

மலர்: முல்லை கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்

பாட வேண்டிய ராகம்: கல்யாணி

யார் யாரெல்லாம் வணங்க வேண்டும்:

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்: திருவாதிரை, ஸ்வாதி, ஸதயம்

திசை புத்தி நடப்பவர்கள்: சூரியன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள்: லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சூரியன் அல்லது ராகு இருப்பவர்கள் விசேஷம்

தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட இன்று விரதம் இருத்தல் நலம்

சொல்ல வேண்டிய பாடல்:

[1]  துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்

   பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்

   கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்

   அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

[2] மூல மந்திரம்:  ஓம் - க்லீம் - வராஹி - ஹூம்பட் - நம:

[3] காயத்ரி: ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

SCROLL FOR NEXT