ஸ்ரீலஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் ஸம்ப்ரோக்ஷணம்
செங்கல்பட்டு மாவட்டம் (சிங்க பெருமாள் கோயில் அருகில்) ஸ்ரீகுன்றம் என்கிற சிறுகுன்றம் கிராமத்தில்....
செங்கல்பட்டு மாவட்டம் (சிங்க பெருமாள் கோயில் அருகில்) ஸ்ரீகுன்றம் என்கிற சிறுகுன்றம் கிராமத்தில் உள்ள பழமையான ஸ்ரீலஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன ஸம்ப்ரோக்ஷணம் ஏப்ரல் 3ம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெறுகின்றது.
யாகசாலை பூஜைகள் ஏப்ரல் 2ம் தேதி ஆரம்பமாகிறது. ஸ்ரீ மகாலட்சுமியே இங்கு தங்கியிருப்பதால் ஸ்ரீகுன்றம் என்று பெயர் பெற்று பின்னர் காலப்போக்கில் சிறுகுன்றம் என்று மருவியதாக ஆலய வரலாறு தெரிவிக்கின்றது.
கடன் நிவாரணம் வேண்டியும், தீராத வியாதி உள்ளவர்களும் ஒரு முறையாவது இங்கு வந்து வழிபட்டால் பலன் கிடைப்பது நிச்சயம் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
மேலும் தகவல்களுக்கு; 9840053289