முகப்பு
ஆன்மிகம்

அட்சயதிருதியை பெருந்திருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்தில் விளங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு அபிவிருத்த......

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:12 AM
பகிர்:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்தில் விளங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு அபிவிருத்தி நாயகி சமேத அட்சயபுருஸ்வரர் திருக்கோயிலில் ஏப்ரல் 21-ம் தேதி அட்சயதிருதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகின்றது.

இத்தலத்து இறைவன் சனீஸ்வரபகவானுக்கு கால் ஊனம் நீக்கி திருமணப்பிராப்தி நல்கி காகவாகனம் அளித்து அருள்பாலித்தார் என்பதும் அவ்வாறு அருள்பாலித்தது ஒரு அட்சய திருதியை நன்னாளில் என்பதும் தலவரலாறு.

மேலும் பூச நட்சத்திரக்காரர்கள் வந்து வழிவட வேண்டிய தலமாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த திருத்தலத்திற்கு அட்சயதிருதியை நாளில் வந்து வழிபட்டு பலன் பெறுமாறு ஆலய நிர்வாகம் பக்தர்களை கேட்டுக்கொள்கிறது.

தொடர்புக்கு: டி.கோவிந்தராஜ், செயல் அலுவலர்: 9443586453

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.