வீரட்டானேஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி கோபுர தரிசனம்
திருக்கோவிலூர்-கீழையூரில் அமைந்துள்ள சிவானந்தவல்லி உடனாகிய ஸ்ரீவீரட்டானேஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி கோபுர தரிசன நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருக்கோவிலூர்-கீழையூரில் அமைந்துள்ள சிவானந்தவல்லி உடனாகிய ஸ்ரீவீரட்டானேஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி கோபுர தரிசன நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாசி மகப்பெருவிழா 5-ம் நாளை முன்னிட்டு, இக்கோயிலில் காலையில் விநாயகர், சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர், வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு விஷேச மகா அபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரர் உற்சவமூர்த்திக்கு அலங்கார மண்டபத்தில் சோடசோபஸôர தீபாராதனையும், யாக சாலையில் 108 விசேஷ மூலிகைப் பொருள்களினால் யாக வேள்விகள் நடைபெற்று, யாக ரûக்ஷ சமர்ப்பணம் செய்து, அதிகார நந்தி வாகனத்தில் சாமி கோபுர தரிசனம் நடைபெற்றது.
நண்பகல் 12 மணிக்கு உற்சவ பஞ்சமூர்திகளுக்கு மகா அபிஷேகமும், மாலையில் பஞ்சமூர்த்திகள் மற்றும் சோமாஸ்கந்தருக்கு சோடசோபஸôர தீபாராதனை, மற்றும் வாணவேடிக்கையுடன் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.
வரும் 3-ம் தேதி சிறப்பு நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி, வேதபாராயணம், திருமுறை தேவாரம் மற்றும் பஞ்சவாத்தியங்களுடன் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், கோயில் குருக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.