முகப்பு
ஆன்மிகம்

திருவையாற்றில் மகா சுவாமிகள் ஜெயந்தி மகோத்சவம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாக விளங்கி நம்மிடையே வாழ்ந்த நடமாடும் தெய்வம்.....

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாக விளங்கி நம்மிடையே வாழ்ந்த நடமாடும் தெய்வம் எனப் போற்றப்பட்ட ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் ஜயந்தி மகோத்ஸவம் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் இலக்கம் 53, பாவாசுவாமி அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர நிலையத்தில் ஜூன் 2ம் தேதி நடைபெறுகின்றது.

பிரபல ஹரிகதை விற்பன்னர் திருவையாறு அண்ணாசுவாமி பாகவதர் வாழ்ந்த இல்லமே தற்போது காஞ்சி மகானின் ஒரு சிறு ஆலயமாகத் திகழ்கின்றது. அன்று காலை நிகழ்ச்சிகளாக சிறப்பு ஹோமங்களும், தேவார இன்னிசையும், மாலை நான்கு மணியளவில் யானையின் மீது பரமாச்சார்யாள் படம் அலங்கரிக்கப்பட்டு நான்கு மாடவீதிகளில் வேதபாராயணத்துடன் ஊர்வலமும் நடைபெறுகின்றது.

மேலும் தகவல்களுக்கு மகாலட்சுமி சுப்ரமண்யம் 984005289 மற்றும் ஆர்.சுந்தரராமன் 9820059288 தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.