சாலியமங்கலம் பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷணம்
தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் 370 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க பாகவத மேள நாட்டிய நாடகம் தொடர்ந்து நடைபெற்ற......
தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் 370 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க பாகவத மேள நாட்டிய நாடகம் தொடர்ந்து நடைபெற்று வரும் கிராமமாகும் இக்கிராமத்தில் பெருமாள் கோயிலில் சமீபத்தில் பல்வேறு திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு புதியதாக தும்பிக்கை ஆழ்வார், ஸ்ரீ லெட்சுமி நரசிம்மர், பாமா ருக்மிணி சமேத கிருஷ்ணர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷணம் நேற்று (மார்ச் 25) காலை 9.30 மணிக்கு மேல் வெகு சிறப்பாக நடந்தேறியது. இரவு பெருமாள் கருடஸேசை நடைபெற்றது. அனைத்து ஏற்பாடுகளையும் அக்ரஹாரம் பொதுநலக்கமிட்டி சிறப்பாகச் செய்திருந்தது.
படங்கள்: அனிருத்