ஆன்மிகம்

தாயாருக்கு ஏழுமலையானின் திருவடி

தினமணி

திருமலையிலிருந்து திருச்சானூருக்கு ஏழுமலையானின் திருவடி கொண்டு வரப்பட்டது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற் சவத்தின் ஆறாம் நாள் இரவான வியாழக்கிழமை கருட வாகன சேவை நடைபெற்றது.
கருட வாகனத்தில் ஏழுமலையான் வரும்போது ஏழுமலையானின் திருவடிகளை தன் கரத்தில் கருடாழ்வார் ஏந்தியபடி வலம் வருவது வழக்கம்.
அதேபோல் தாயார் கருட வாகனத்தில் வலம் வரும்போது தாயாரின் திருவடிகளை பற்றிக் கொண்டு கருடன் வலம் வர வேண்டும். ஆனால் தாயார் பெண் என்பதால் தாயாரின் திருவடிகளை கருடன் பற்றிக் கொண்டு வருவது சாத்தியமில்லை.
அதனால் தாயார் கருடன் மீது எழுந்தருளும் போது திருமலை ஏழுமலையானின் திருவடிகள் பொருத்தப்படும். அதற்காக திருமலையிலிருந்து ஏழுமலையானின் திருவடிகள் வியாழக்கிழமை மாலை திருச்சானூருக்கு கொண்டு வரப்பட்டது.
பின் கோவிந்தராஜ சுவாமி கோயிலிருந்து குடையில் வைத்து ஊர்வலமாக திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு கொண்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT