முகப்பு
ஆன்மிகம்

சீரடி மகானுக்கு சீர்மிகு ஆலயம்!

சத்குரு சாயிநாத் அவர்கள் பூமியில் அவதரித்து சீரடியில் வாழ்ந்து மறைந்தவர் எளிமையும், தத்துவங்களும், உயர்ந்த நீதிகளும் அடங்கியது இவரது வாழ்க்கை

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:45 PM
பகிர்:

சத்குரு சாயிநாத் அவர்கள் பூமியில் அவதரித்து சீரடியில் வாழ்ந்து மறைந்தவர் எளிமையும், தத்துவங்களும், உயர்ந்த நீதிகளும் அடங்கியது இவரது வாழ்க்கை. பாமரமக்களும் எளிதில் கடைப்பிடிக்க வேண்டியவை. கடவுள் நாமமும், கடவுளும் ஒன்றே என்ற உண்மையை நிலைநாட்டும் ஒரு சொல் தான் சாயி. அந்த இரண்டெழுத்து நாமஸ்மரணத்தினால் பாபாவை சரணமடைந்தால் பாரில் புகழ் அடையலாம் என்பதில் இரண்டாவது கருத்திற்கு இடமில்லை. அவருடைய ஒரு ஆலயம் அமைய வேண்டும் என்ற ஒத்தகருத்தில் ஒரு தம்பதியினர் சிறப்பாக முனைந்து செயல்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்காவில் மிஞ்சூரிலிருந்து 6 மி.மீ தொலைவில் குசஸ்தல ஆற்றங் கரையில் உள்ள சுப்பாரெட்டிபாளையம் என்ற கிராமத்தில் கிராம தேவதையான அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு பக்கத்திலேயே சீரடி மகான் மந்திர் கட்டப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் வலம்புரி விநாயகருக்கு, சீதா, ரட்சுமணர், ஆஞ்சநேயருடன் ராமபிரானுக்கு தத்தாத்ரேயருக்கு சந்நதிகள் அமைந்துள்ளது.

ஷீரடி மகானின் அதிஅற்புதமான 5-1/2 அடி உயர பளிங்கு சிலைத் திருமேனி மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து சலவை கற்சிலைகளும் ஜெய்ப்பூரிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளது.

துனி என்று சொல்லப்படும் நித்ய அக்னி வழிபாட்டிற்கு பிரத்யேக மண்டபம் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது சிறப்பாகும் வடக்கிந்திய பாணியில் கோபுரத்துடன் திகழும் சீரடி மகான் அமைந்த மண்டபத்தைச் சுற்றி வெளியே மேற்புறத்தில் தமிழ்நாட்டுப் பாணியில் தசாவதார சிலைகளும், சக்தி, சரஸ்வதி, பாரதமாதா சிலைகளும் அலங்கரிக்கின்றன. சீரடியிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள மிருத்யு (மண்) மூலஸ்தானத்தில் அஷ்டபந்தன திரவியங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

கரிக்கோல விஜயமாக மகானின் சிலை கிராமத்தைச் சுற்றி முக்கிய வீதிகளில் ஜூலை 20-ம் தேதி நாதஸ்வர இன்னிசை, கோலாட்டம், பஜனையுடன் வலம் வருகின்றது. நூதன ஆலய விக்ரஹ பிரதிஷ்டாபன மகாகும்பாபிஷேகம் ஜூலை 21-ம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெறுகின்றது. ஜூலை 19 முதல் பூர்வாங்க ஹோமங்கள், பூஜைகள் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி அன்னதானம் போன்றவை தொடங்கப்படுகின்றது. சாயி பக்தர்கள் பெருமளவில் பங்கேற்கின்றனர். மிஞ்சூர் செல்ல சென்னை பிராட்வேயிலிருந்து பேருந்து வசதியும், சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலும் உள்ளது.

மேலும் தகவல்களுக்கு டி.பாபுரெட்டி செல் 9380314455 / 9940157799 / 9884569680.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.