முகப்பு
ஆன்மிகம்

மயிலாடுதுறையில் முப்பெரும் குருபூஜை விழா

சென்னை, ஷெனாய் நகரில் இயங்கிவரும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருள்நெறி அறக்கட்டளை ஆண்டுதோறும் ஸ்ரீ சேக்கிழார் சுவாமிகள், ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள்,

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

சென்னை, ஷெனாய் நகரில் இயங்கிவரும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருள்நெறி அறக்கட்டளை ஆண்டுதோறும் ஸ்ரீ சேக்கிழார் சுவாமிகள், ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் ஆகிய அருளாளர்களின் குருபூஜை விழாவினை ஒவ்வொரு தலங்களிலும் கொண்டாடி வருகிறது. இவ்வாண்டு முப்பெரும் குருபூஜை விழா ஜூன் 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மயிலாடுதுரை ஸ்ரீ மயூரநாதர் ஆலய வளாகத்தில் உள்ள சிவா மழலையர் தொடக்கப்பள்ளியில் நடைபெறுகின்றது.

அன்று காலை 7 மணி அளவில் ஸ்ரீமயூரநாத சுவாமி ஆலயத்தில் சிறப்பு அபிஷேக வழிபாட்டுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. மயிலாடுதுறை ஆதினக்கட்டளை மடம் ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வரவேற்புரை நிகழ்த்துகின்றார்கள். திருமுறை அன்னிசை, சிவநெறி சிந்தனை சொற்பொழிவுகள், மாகேஸ்வர பூஜை போன்றவைகள் நிகழ்ச்சிகளில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு சிவனடியார் திருக்கூட்டத்தினர், வழிபாடு மன்றத்தினர் பங்கேற்கின்றனர். திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதினம் 24-வது குரு மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் எழுந்தருளி அருளாசி வழங்குகின்றார்.

சென்னையிலிருந்து அடியார்களை அழைத்துச் செல்வதாகவும் குருபூஜை விழாவில் பங்கேற்குமாறும் அறக்கட்டளை ஸ்தாபகர் வி.இரவிச்சந்திரன் தெரிவிக்கின்றார்.

மேலும் தகவல்களுக்கு - 9444387061

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.