முகப்பு
ஆன்மிகம்

பங்குனி உத்திர மகோத்சவம்

பம்மல் அண்ணாநகர் தனுஷ்கோடி ராமர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ராஜலட்சுமி சமேத ஸ்ரீயக்ஞவராஹ யோக லட்சுமி நரசிம்ம சுவாமி....

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:51 PM
பகிர்:

பம்மல் அண்ணாநகர் தனுஷ்கோடி ராமர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ராஜலட்சுமி சமேத ஸ்ரீயக்ஞவராஹ யோக லட்சுமி நரசிம்ம சுவாமி உற்சவ மூர்த்திக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மார்ச் 23-ம் தேதி புதன்கிழமை இருவேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

காலை 9.30 மணிக்கு இந்த உற்சவ திருமேனி குரோம்பேட்டை நேருநகர் எஸ்.ஸி.எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் எழுந்தருளிச் செய்யப்பட்டு நவகலச சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை நேருநகர் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயண மண்டலியினர் செய்துள்ளனர்.

மாலை 5 மணிக்கு மேல் பல்லாவரம் அருகில் பம்மல் அண்ணாநகரில் உள்ள ஸ்ரீ தனுஷ்கோடி ராமர் ஆலய வளாகத்தில் திருக்கல்யாண உத்சவம் நடைபெறுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.