ஆன்மிகம்

பார்க்கிறவர்களின் பார்வைக்கு ஏற்ப அளவுக்கு அளவாகக் காட்சிதரும் அதிசய லிங்கம் 

தினமணி

பொதுவாக ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தனிச் சிறப்பு இருக்கும். அதில், பல அபூர்வமான விஷயங்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கும். அதேபோலத் தான் தேனி மாவட்டம் சின்னமனூரில் அமைந்துள்ள பூலாநந்தீஸ்வரர் திருக்கோயிலிலும் பல ஆச்சரியமான தகவல்கள் உள்ளன. 

எப்பொழுதும் வியர்க்கும் அதிசய அம்மன்
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் திருநாமம் சிவகாமி அம்மன். இங்கிருக்கும் அம்மனுக்கு முகம் எப்பொழும் வியர்த்துக் கொண்டே இருக்குமாம். அர்ச்சகர்கள் எத்தனை முறை அம்மனுக்கு அலங்காரங்கள் செய்தாலும் முகம் மட்டும் வியர்த்தபடியே இருப்பது இந்தக் கோயிலின் அதிசயமாகும்.

அளவுக்கு அளவான லிங்க காட்சி...
சிவபெருமான் பல இடங்களில் சுயம்புவாக தோன்றுவது போல் சுரபி நதி அருகிலும் சுயம்புவாக தோன்றினார். வீரபத்திரர் சாபம் பெற்ற கற்பகத்தரு லிங்கத்தின் அருகில் பூலா விருட்ச வனமாக மாறி சிவலிங்கத்திற்கு நிழல் தந்தது. 

அப்பகுதியை ஆண்ட இராச சிங்க பாண்டியன் சுரபி நதிக்கருகில் தங்கியிருந்தபோது அவனுக்குப் பால் கொடுக்க வரும், ஆயன் தினமும் அந்தப் பூலா மரத்தருகே தடுக்கி தடுக்கி விழுந்ததனால் கோபம் கொண்டு புலா மரத்தின் வேரைக் கோடாரியால் வெட்ட ரத்தம் பீரிட்டது. 

ரத்தம் பீரிட்ட விஷயம் இராச சிங்க பாண்டியனுக்குத் தெரிய வர அந்த இடத்தைத் தோண்ட அழக்கான வெட்டுப் பட்ட நிலையில் லிங்கம் காட்சியளித்தது. பின் குருதி மாறி ஆகாய உயரத்திற்கு விஸ்வரூபமெடுத்த இறைவன், மன்னனின் வேண்கோளுக்காக அளவுக்கு அளவாகக் குறுகி நின்று காட்சியளித்தார். ஆனந்தம் பொங்க லிங்க வடிவான இறைவனை மன்னன் கட்டித் தழுவினான். அதிலிருந்து அளவுக்களவானவர் என்று அழைக்கப்படுகிறார். மன்னன் ஆலிங்கனம் செய்த அடையாளமாக இப்போதும் லிங்கத்தின் மீது மன்னனின் மார்புக் கவசத் தடம் இருக்கிறது.

கல்லாக மாறும் எலும்புகள் 
இவ்வூரில் இறப்பவர்களின் எலும்புகள் சுரபி நதியில் விழுந்தால் கல்லாக மாறிவிடும் என்பது ஐதீகம். 

பூ நடுவில் லிங்கம் 
இங்குள்ள மரத்தில் நாகலிங்க பூ பூக்கின்றது. இப்பூவின் நடுவில் லிங்கம் போன்றும் அதற்கு ஆதிஷேசன் போல் குடையாக லிங்கத்தின் மீது இருப்பது அதிசயமாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT