சந்திரன் உங்கள் இராசியில் இருந்தால் என்ன பலன்?
ஒருவருடைய இராசியில் சந்திரன் இருக்கும் போது பிறந்தவர்கள் அல்லது ராசியில் சந்திரன் வரும் போது அவரின் குண நலன்கள் எப்படி இருக்கும்? என்ன பலன்கள் ஏற்படும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
ஒருவருடைய இராசியில் சந்திரன் இருக்கும் போது பிறந்தவர்கள் அல்லது ராசியில் சந்திரன் வரும் போது அவரின் குண நலன்கள் எப்படி இருக்கும்? என்ன பலன்கள் ஏற்படும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
• மேஷ ராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஜாதகர் மிகவும் தைரியசாலியாகவும், புத்திசாலியாகவும் திகழ்வர். இவர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்கள் பெண்மையை மதிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பர். எடுத்த காரியத்தில் போராடி வெல்லும் குணம் கொண்டவர்கள்.
• ரிஷப ராசியில் சந்திரன் இருந்தால் நல்ல உடல் அமைப்பு, மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் நல்ல திறமை உடையவர்கள். இவர்களுக்கு வாழ்வில் மத்திய வயதிலும், வாழ்வின் முடிவுப் பகுதியிலும் அபரிதமான செல்வம் பெருகும். இவர்களுடைய மனம் எப்போதும் அலைபாய்ந்தபடியே காணப்படும்.
Advertisement
• மிதுன ராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஜாதகர் நல்ல கல்வியறிவு உடையவராக இருப்பர். நீண்ட ஆயுள், நிம்மதியான வாழ்வு, ஆன்மிக ஈடுபாடு, இசைத்துறையில் வல்லமை மற்றும் எப்போதும் இளமைத் தோற்றத்துடன் காணப்படுவர். இவர்கள் வாழ்வில் அதிக கஷ்டங்களை சந்திக்க மாட்டார்கள்.
• கடக ராசியில் சந்திரன் ஆட்சி பெற்றிருக்கும்போது பிறந்த ஜாதகர் மற்றவர்களிடம் மிகவும் இரக்கமாக நடந்து கொள்வர். பெண்களால் மிகவும் அனுகூல பலன் அடைவர். வீடு, வாகனம், பூமி வாங்கும் யோகம் உண்டு. கடல் கடந்து அந்நிய நாட்டிற்குச் செல்லும் யோகம் கொண்டவர்கள்.
• சிம்ம ராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஜாதகருக்கு மிகுந்த தைரியம் உடையவராக இருப்பர். வயிறு தொடர்பான கோளாறு உண்டாக்க வாய்ப்புள்ளது. சில சமயத்தில் மற்றவர்களுக்கு வெறுப்பு ஏற்படும் அளவிற்கு நடந்துகொள்வர். வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக அமையும். தற்பெருமை கொண்டவர்களாக இருப்பர்.
• கன்னி ராசியில் சந்திரன் இருந்தால் அந்த ஜாதகர் செல்வந்தராக திகழ்வர். செல்வம், செல்வாக்கு, பெருமை, புகழ் யாவும் தேடி வரும். உண்மை உள்ளவராகவும், ஒழுக்கம் உள்ளவராகவும் திகழ்வர். கலைத்துறையில் நாட்டம் இருக்கும். இவர்களுக்கு ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளே அதிகமாக இருக்கும்.
• சந்திர பகவான் துலா ராசியில் இருக்கும் போது பிறந்தவர்கள் எப்போதும் வியாபார நோக்கம் உடையவர்களாகவே இருப்பர். இவர்களுக்கு ஆரோக்கியம் நன்றாக இருக்காது. ஆனால் மிகச்சிறந்த திறமைசாலிகள். எப்படியாவது வாழ்க்கையில் மேன்மையடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுவர். பார்வைக்கு மிகவும் வசீகரமாக இருப்பர்.
• விருச்சிக ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும்போது பிறந்தவர்கள் செல்வம் படைத்தவர்களாக திகழ்வர். இவர்களுடைய எண்ணங்கள் மற்றும் செயல்கள் கொடூரம் நிறைந்ததாக இருக்கும். இவர்கள் பெற்றோர்களைப் பிரிந்து தனிக்குடித்தனமாக இருப்பார்கள்.
• சந்திரன் தனுசு ராசியில் இருக்கும்போது பிறந்த ஜாதகர்கள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையைப் பெறுவார்கள். இவர்களுக்கு அசையாத சொத்துகள் அதிகம் சேரும். கலைத்துறையில் வல்லவராக திகழ்வர். இலக்கியம், கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர்.
• மகர ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும்போது பிறந்த ஜாதகர் மனைவி, குழந்தைகளிடம் அன்பு கொண்டவர்களாக இருப்பர். குடும்ப வாழ்வு திருப்திகரமாக இருக்கும். இவர்கள் சுயநலவாதியாகவும், சோம்பேறியாகவும் இருப்பர். சிறந்த நீதிமானாகவும் ஒழுக்கமானவராகவும் திகழ்வர்.
• கும்ப ராசியில் சந்திரன் இருக்கும் போது பிறந்தவர்கள் நல்ல உயரம், சிறந்த உடல் அமைப்பு, மேன்மையான கல்வி, ஆன்மிக ஈடுபாடு இருக்கும். வாழ்வின் பிற்பகுதியில் உயர்ந்த அமைப்பை பெரும் யோகம் யாவும் உண்டாகும்.
• சந்திரன் மீன ராசியில் இருக்க பிறந்தவர்கள் மிகவும் வல்லவர்களாகத் திகழ்வர். உறுதியான மனம் படைத்தவர்களாக இருப்பர். இவர்களுக்கு ஆடை அணிகலன்கள் அபரிதமாக இருக்கும். கடல் மற்றும் நீர் தொடர்புள்ள வியாபாரம் பெறும் அமைப்பை உடையவர்கள்.