ஆன்மிகம்

திருப்பதி தேவஸ்தான காலண்டர், டைரி ஆன்லைனில் விற்பனை

தினமணி

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுதோறும் பக்தர்களுக்கு வழங்கும் காலண்டர், டைரி ஆன்லைனில் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

திருப்பதி தேவஸ்தானம் வெளியிடும் காலண்டர், டைரி ஜனவரி மாதத்தில் மட்டும் இன்றி ஆண்டுமுழுவதும் வாங்குவதற்கு பக்தக்ரள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், பக்தர்கள் சுலபமான முறையில் ஆன்லைனில் பெறும் வசதியைத் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. ஆர்வமுள்ள பக்தர்கள் திருப்பதியின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம். 

இந்த வசதியைத் துவக்கி வைத்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி கூறுகையில், டிசம்பர் 7-ம் தேதி முதல் தபால்துறை உதவியுடன் பக்தர்கள் இந்த வசதியைப் பெறலாம் எனக் கூறியுள்ளார். மேலும், திருப்பதி காலண்டர், டைரிகளை பக்தர்கள் வாங்கி நாடு முழுவதிலும் உள்ள தங்களுடைய உறவினர்கள், நண்பர்களுக்குப் பரிசளிக்கலாம். 

திருப்பதியின் அதிகாரப்பூர்வ www.ttdsevaonline.com இணையதளத்தில் ஆர்டர் செய்து டெபிட் கார்ட் மற்றும் கிரேடிட் கார்டில் பணத்தைச் செலுத்தலாம். அதன் பின்னர் அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பப்படும். தபால் மூலம் அனுப்பப்படும் டைரி, காலண்டருக்கான அஞ்சல் விநியோகக் கட்டணத்தை பக்தர்கள் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT