ஆன்மிகம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கே.சுப்பிரமணியன்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கட்கிழமையன்று ஆனி வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆனி வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கோயில் திங்கட்கிழமையன்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு எடுத்துவரப்பட்டு, காலை 9.30 மணிக்கு மூலவர், சண்முகர், வெங்கடாஜலபதி, வள்ளி மற்றும் தெய்வானை என வரிசையாக விமான அபிஷேகம் நடைபெற்றது.

அதன்பின் மூலவர் மற்றும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.  இரவில் குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வநது பக்தர்களுக்கு காட்சியளித்தனர். வருஷாபிஷேக விழாவில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் காவல் துணை கண்காணிப்பாளர் தீபு தலைமையிலான காவல்துறையினர் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT