ஆன்மிகம்

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம்

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலில் ஆடிப்பூர கொடியேற்ற விழா திங்கள் கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையில் பெரியநாயகி உடனுறை வீரட்டானேசுவரர் கோயில் அமைந்துள்ளது.

பழமையும், வரலாற்றுச் சிறப்புமிக்க கோயிலில் ஆடிப் பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான ஆடிப்பூர திருவிழா திங்கள் கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக காலை பஞ்சமூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டன. பெரியநாயகி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிவாச்சாரியார்கள் விவாக மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினந்தோறும் மாலை பெரியநாயகி அம்மாளுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மாட வீதியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் நாள் (ஜூலை 25) அன்று காலை 9 மணியளவில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற உள்ளது. 26-ம் தேதி கொடியிறக்கம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT