ஆன்மிகம்

இந்துமத அற்புதங்கள் 52: ஏகம்பன் தந்த ஏகபார்வை

டாக்டா் சுதா சேஷய்யன்

திருவெண்பாக்கத்தில் கோல் பெற்று அங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்தார் சுந்தரர். காஞ்சிபுரம் அடைந்தார். "கச்சி ஏகம்பனே! கண்ணளிக்க மாட்டாயா? உன்னைக் கண்டு தரிசிக்கக் கண்ணளிக்க மாட்டாயா?'' என்று கதறியழுதார். "கடையனேன் என் பிழை பொறுப்பாய்'' என்று விண்ணப்பம் செய்தார். அவரின் வேண்டுகோள் கேட்டு அவரின் இடது கண்ணில் பார்வை அருளினார் பரம்பொருள்.

இறைவன் - திருவேகம்பர், ஏகாம்பரநாதர், ஏகாம்பரேஸ்வரர்.
இறைவி - ஏலவார் குழலி.

ஒரு கண்ணில் பார்வை கிட்டியவுடன், பரமனைப் பார்த்த மகிழ்ச்சியில் பதிகம் பாடிப் பரவினார் சுந்தரர்.

காஞ்சிபுரத்தில் கண் பார்வை பெற்று சுந்தரர் பாடிய பதிகம்

"ஆலந்தான் உகந்து அமுது செய்தானை
ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தையுளானை
ஏலவார் குழலாள் உமைநங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாறே.''

காஞ்சிபுரம் தலத்தினைச் சென்றடையும் வழி:
சென்னை, செங்கற்பட்டு, அரக்கோணம், வேலூர் முதலிய பல நகரங்களிலிருந்து வருவதற்குப் பேருந்து வசதிகள் உள்ளன. சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்குப் பேருந்துகள் அடிக்கடி உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT