ஆன்மிகம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

தினமணி

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த நிகழ்வில், ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றிருக்கும் சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி, ஆவாஹணம் செய்து காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் உற்சவ ஆச்சாரியார் து.தி.ஆபத்சகாய தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். உற்சவம் தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.

ஜூன் 29-ம் தேதி தேர்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனையும் நடைபெறும். ஜூன் 30-ம் தேதி சூரிய உதயத்துக்கு முன்பாக அதிகாலை காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும்.

பின்னர், காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறும். ஜூலை 1-ம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10ம் வகுப்பு தேர்வு முடிவு: 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: அரியலூர் முதலிடம்.... முதல் 5 மாவட்டங்கள்!

கணக்கில் கலக்கிய புலிகள்: சதமடித்து சாதித்த மாணவர்கள்!

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவு: 91.55% பேர் தேர்ச்சி

தஞ்சாவூரில் ரயில் அபாய சங்கிலி இழுத்து விவசாயிகள் போராட்டம்

SCROLL FOR NEXT