ஆன்மிகம்

மலைக்கோயில் தரிசனத்திற்கு ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் காரணம்!

தினமணி

நம் முன்னோர், மலைகளில் கோயில்களை அமைத்து, வழிபாடு செய்ததற்கு ஆன்மிகக் காரணம் மட்டுமல்ல, அறிவியல் காரணமும் இருக்கிறது.

நம் ஆரோக்கியம் கருதியே அவர்கள் இவ்வாறு வழிபாடு மேற்கொண்டுள்ளனர். அடிவாரத்தில் இருந்து நடந்து மலையேற வேண்டும் என்பதற்காக, பாத விநாயகர் கோயிலை அடிவாரத்தில் கட்டினர்.

மலைப்பாதையின் இருபுறமும் வனம் போல திறந்தவெளியாக இருக்கும். அங்குள்ள மூலிகைகள் மீது பட்டு வரும் காற்று மருத்துவகுணம் கொண்டது. அது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியை தரும். மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, தசைகள் வலுவடையும். தேவையற்ற கொழுப்பு, சதை கரைந்து போகும். காலுக்குச் சிறந்த பயிற்சி ஏற்படும் வியர்வை வெளியேறும். நல்ல பசி உண்டாகும். மலைப்பாதையிலுள்ள ஊற்று, சுனை நீரில் மருத்துவகுணம் உள்ளதால், அதில் குளிக்கும் போது உடலில் ஏற்பட்ட தோல் நோய்கள் குணமடையும்.

திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சதுரகிரி, பர்வதமலை போன்ற தலங்களில் மலையைச் சுற்றி வந்து வழிபடுவதும் இதற்காகத் தான். கிரிவலம் வரும்போது விளையாட்டாகப் பேசிக் கொண்டு சுற்றக் கூடாது. இறை சிந்தனையுடன் மட்டும் சுற்ற வேண்டும். இதனால் தியானத்திற்கு ஈடாக மனம் ஒருநிலைப்படும். மனம் அடங்கினால் உடலுக்கு நல்லது. இதன் அடிப்படையில் தான் மலையில் கோயில்கள் கட்டப்பட்டன.

இன்றோ, சில மலைக் கோயில்களில் வாசல் வரை வாகனங்களில் செல்லும் வழக்கம் வந்து விட்டது. முடியாதவர்களும், முதியவர்களும் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தால், இறையருளுடன் உடல்நலமும் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT