ஆன்மிகம்

விரைவில் கோயில் பிரசாதங்களுக்கும் வருகிறது காலாவதி தேதி!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் வழங்கப்படும்  பிரசாதங்களில் இனிமேல் காலாவதி தேதி அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட உள்ளது. 

தினமணி

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் வழங்கப்படும்  பிரசாதங்களில் இனிமேல் காலாவதி தேதி அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட உள்ளது. 

அந்தவகையில், புகழ்பெற்ற பழனி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிருதம் முன்னிலை வகிக்கிறது. இந்து சமய மற்றும் அறநிலைத்துறையால் நிர்வகிக்கப்படும் கோயில்களான, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இட்லி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் புட்டு என ஒவ்வொரு கோயிலிலும் வழங்கப்படும் பிரசாதங்கள் பிரபலமானவை. 

இந்நிலையில் கோயில்களில் தயாரித்து வழங்கப்படும் உணவு இந்தியா உணவுப் பாதுகாப்பு விதியின்படி தயாரித்து வினியோகம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதற்காக, கோயில்களில் பிரதாசம் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இதேப் போன்று பிரசாதங்களின் தரம் குறித்து ஆய்வு செய்து, எவ்வளவு நாள் பயன்படுத்தலாம் என்ற தேதியை அச்சிட்டு வினியோகம் செய்யும் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாகக் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிருதங்களை ஆய்வு செய்து காலாவதி தேதியை அச்சிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

தவெக பொதுக்குழு கூட்டம்! மேடைக்கு வந்த விஜய்!

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

SCROLL FOR NEXT