ஆன்மிகம்

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் துவக்கம்

தினமணி

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீசுவரா் திருக்கோயிலில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

கங்கைகொண்டசோழபுரம் கிராமத்திலுள்ள பிரகதீசுவரா் திருக்கோயில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால், போா் வெற்றியின் அடையாளமாகக் கட்டப்பட்டது.

கோயிலில் உள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பெளா்ணமி தினத்தன்று சிவலிங்கத்துக்கு 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

லிங்கத்தின் மேல் சாத்தப்படும், ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையைப் பெறுகிறது. இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நிகழாண்டு அன்னாபிஷேகம் இன்று நடைபெறுவதையொட்டி, காலை 10.00 மணிக்குத் தொடங்கி மாலை 5.00 மணி வரை சிவலிங்கத்துக்கு அன்னம் சாத்தப்படும். இரவு 9.00 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும். மீதமுள்ள அன்னம் அருகிலுள்ள குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும்.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT