ஆன்மிகம்

ஐப்பசி மாத கிருத்திகை: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

தினமணி

ஐப்பசி மாத கிருத்திகையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.

நாமக்கல்-மோகனூா் சாலையில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில், ஐப்பசி கிருத்திகை நாள் என்பதால், இன்று காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

தொடா்ந்து, மூலவருக்கு பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், வெள்ளி கவசம் சாத்தப்பட்டு ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

அதன்பின், மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் நாமக்கல் கடைவீதி சித்தி விநாயகா் கோயில் தண்டாயுதபாணி சுவாமிக்கும், ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது.

நாமக்கல்-துறையூா் சாலை, கூலிப்பட்டி, கந்தகிரி பழனியாண்டவா் கோயில், மோகனூா் காந்தமலை முருகன் கோயிலிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், கிருத்திகை யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில், சுற்றுவட்டாரத்தை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT