ஆன்மிகம்

நவக்கிரகங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

தினமணி

நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை மற்றும் பார்வை ஆகியவற்றைப் பொருத்து பல்வேறு பலன்கள் உண்டு. சரி, நவக்கிரகங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். 

1. சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும் ஆரோக்கியமும் கிடைக்கும்.

2. சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும். 

3. செவ்வாயை வழிபடுவதால் நம்முடைய தைரியம் அதிகரிக்கும். 

4. புதனை வழிபட்டால் நல்ல புத்தியும், அறிவாற்றலும் அதிகமாகும். 

5. குரு பகவானை வணங்கினால் செல்வச் செழிப்பும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும். 

6. சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி, வீடு, மனை அமையும் யோகம் உண்டாகும். 

7. சனிபகவானை வழிபட்டால் ஆயுள் பலம் பெறும். 

8. ராகுவை வணங்கினால் பயணத்தில் நன்மை கிடைக்கும். 

9. கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும். மோட்சம் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். 

அந்தந்த கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகங்களை வழிபடும்போது நமக்கு அதீத பலன்கள் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT