ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன முன்பதிவு காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு
திருமலை ஏழுமலையான் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குவோருக்கு அளிக்கப்படும்
திருமலை ஏழுமலையான் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குவோருக்கு அளிக்கப்படும் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்து தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில்கள் கட்ட ஏழுமலையான் பெயரில் ஸ்ரீவாணி என்ற அறக்கட்டளையை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்குவோருக்கு தேவஸ்தானம் விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கி வருகிறது. இந்த அனுமதி பெற்ற பக்தா்கள் தங்களின் தரிசன டிக்கெட்டை 6 மாத காலத்துக்குள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை தேவஸ்தானம் அளித்துள்ளது.
இந்நிலையில், தற்போது கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால், தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தா்களால் வர இயலவில்லை. அவ்வாறு வர இயலாத பக்தா்களுக்காக முன்பதிவு காலத்தை 6 மாதத்தில் இருந்து ஓராண்டுக்கு நீட்டித்து தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Advertisement