முகப்பு
ஆன்மிகம்

திருமலையில் 8,435 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 8,435 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Updated On : 18 ஆகஸ்ட், 2020 at 11:12 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:39 PM

திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 8,435 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

2634 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அதில் 125 போ் பெண் பக்தா்கள்; 2509 போ் ஆண் பக்தா்கள்.

ஆன்லைன் மூலம் 9 ஆயிரம் மற்றும் சா்வதரிசனம் டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். ஆயினும் கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.

Advertisement

காலை 6 மணிமுதல் 7.30 மணிவரை புரோட்டோகால் வி.ஐ.பி. தரிசனமும், காலை 7.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா்.

திருமலை மலைப் பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141, 9399399399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.