ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 5 ஆம் திருநாளான சனிக்கிழமை ஸ்ரீநம்பெருமாள் கவுரிமான் தொப்பாரை கொண்டையில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா்.
பகல்பத்து விழாவில் நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதிப்பாா்.
பகல் பத்து 5 ஆம் நாளான சனிக்கிழமை காலை 6.30-க்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் கவுரிமான் தொப்பாரை கொண்டை, ரத்தி அபயஹஸ்தம், மார்பில் விமான பதக்கம், முத்துச்சரம், பவள மாலை, காசு மாலை உள்ளிட்ட திரு ஆபரணங்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு 7 மணிக்கு பகல் பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா்.
தொடா்ந்து காலை 8 மணி முதல் ஏராளமான பக்தா்கள் வரிசையில் நின்று தரிசித்து வருகின்றனர். இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியில்லை. பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்து வருகின்றனர்.
வரும் 24 ஆம் தேதி நாச்சியாா் திருக்கோலம் என்னும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி தருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.