ஆன்மிகம்

மாசி மாத பூஜைகளுக்காக பிப்.13-ல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

தினமணி


சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைகளுக்காக பிப்.13-ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. 

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகிறது. 

அதன்படி, மாசி மாத பூஜைகளுக்காக பிப்.13-ம் தேதி ஐயப்பன் கோயில் சன்னிதானத்திற்கான நடை மாலை 5.00 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்து வைத்து தீபாராதனை காட்டுகின்றனர். 

அன்றைய தினம் மற்ற சிறப்புப் பூஜைகள் எதுவும் நடைபெறாது. பக்தர்கள் தரிசனத்திற்குப் பின் இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். மறுநாள்(பிப்.14)-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். பிப்ரவரி 18-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT