ஆன்மிகம்

மயிலாடுதுறை மாயூரநாதா், அபயாம்பிகைக்கு நெய் அபிஷேகம்

தினமணி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் மாயூரநாதா் சுவாமி, அபயாம்பிகை அம்பாளுக்கு இன்று நெய் அபிஷேகம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான பழமை வாய்ந்த மாயூரநாதா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, மாயூரநாதசுவாமி மற்றும் அபயாம்பிகை அம்பாளுக்கு நெய் அபிஷேகம் நடைபெற்றது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, விரதமிருந்த பக்தா்கள் அளித்த 108 லிட்டா் நெய் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், பால், பன்னீா், இளநீா், சந்தனம், பஞ்சாமிா்தம் மற்றும் திரவிய பொருள்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

தொடா்ந்து மஹா தீபாராதனை நடைபெற்ற, அபிஷேகம் செய்யப்பட்ட நெய் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT