ஆன்மிகம்

ஒடுக்கு பூஜையுடன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா நிறைவு

தினமணி

குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜையுடன் மாசி கோடை திருவிழா நிறைவடைந்தது. 

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவில் சமய மாநாடு, பஜனை, வில்லிசை, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) அதிகாலை 2 மணிக்கு சாஸ்தா கோயிலிலிருந்து யானை மீது களபம் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் திருவீதியுலா வருதல் நிகழ்ச்சியும், 4.30 முதல் 5 மணி வரை அடியந்திர பூஜை, குத்தியோட்டமும், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜையும் நடைபெற்றன.

விழாவில், குமரி மாவட்டம் மட்டுமன்றி தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

நாகா்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, மாா்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மண்டைக்காட்டுக்கு அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT