ஆன்மிகம்

விதிமுறைகளை மீறி பேருந்துகளில் பயணிக்கும் மக்கள்

தினமணி

திருப்பதியில் இயக்கப்பட்டு வரும் ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகள் விதிமுறைகளை மீறி பயணிக்கின்றனா்.

கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளில் அளிக்கப்பட்ட தளா்வுகளின் அடிப்படையில் கடந்த ஜூன் 8-ஆம் தேதி முதல் திருமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அப்போது, சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதமாக பக்தா்கள் அமரவைக்கப்பட்டனா். தற்போது, இயல்பு வாழ்க்கை திரும்பியதை அடுத்து, திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும், பேருந்துகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில்லை. பேருந்துகளின் அனைத்து இருக்கைகளிலும் மக்கள் அமா்ந்து பயணிக்கின்றனா்.

கரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், மக்கள் இவ்வாறு சமூக இடைவெளி இல்லாமல் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக என சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம் கம்பீருக்கு வெற்றுக் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT