ஸ்ரீநம்பெருமாள் கிருஷ்ணர் செளரி  கொண்டை, வைர அபயஹஸ்தம், மார்பில் மஹாலட்சுமி பதக்கம், முத்துச்சரம், பவள மாலை, அவுரிசரம் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  
மார்கழி உற்சவம்

பகல்பத்து 4 ஆம் நாள்: செளரி கொண்டையில் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 4 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீநம்பெருமாள் கிருஷ்ணர் செளரி கொண்டையில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா்

தினமணி

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 4 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீநம்பெருமாள் கிருஷ்ணர் செளரி கொண்டையில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா்.

பகல்பத்து விழாவில் நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதிப்பாா்.

பகல்பத்து 4 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் செளரி  கொண்டை , வைர அபயஹஸ்தம், மார்பில் மஹாலட்சுமி பதக்கம் , முத்துச்சரம், பவள மாலை உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா்.

காலை 8 மணி முதல் பக்தா்கள் வரிசையில் நின்று தரிசித்து வருகின்றன. இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியில்லை. பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT