வைகுந்த ஏகாதசி பகல் பத்து 10-ஆம் திருநாளான் வியாழக்கிழமை மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள். 
மார்கழி உற்சவம்

பகல் பத்து 10-ம் திருநாள்: மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்

பகல்பத்து 10 ஆம் நாளான வியாழக்கிழமை காலை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

தினமணி

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து 10 ஆம் நாளான வியாழக்கிழமை காலை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

விழாவையொட்டி காலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பட்டு காலை 7 மணிக்கு பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினாா். 

அங்கு அலங்காரம், அமுது செய்யத் திரையிடப்பட்டு காலை 8 மணி முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று முகக் கவசம், சமூக இடைவெளியுடன் நம்பெருமாளைத் தரிசித்து வருகின்றனர். இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியில்லை. 

வைகுந்த ஏகாதசி பகல்பத்து 10-ஆம் நாளான வியாழக்கிழமை முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி - புகைப்படங்கள்

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி; சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி!

ரஷிய எண்ணெய் கொள்முதல் : இந்தியாவின் ஒப்புதலைப் பெற்றதாக அமெரிக்கா கருத்து!

மகா சிவராத்திரி வழிபாடு - புகைப்படங்கள்

இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோத குடியேறிகள் அல்லர் : பிரதமருக்கு கடிதம்

SCROLL FOR NEXT