ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் செப்.,16-ல் பத்மசக்ர அபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி அருகில் தென்னாங்கூரிலிருந்து 4 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது ஸெளந்தர்யபுரம் கிராமம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி அருகில் தென்னாங்கூரிலிருந்து 4 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது ஸெளந்தர்யபுரம் கிராமம்.
இங்குள்ள பழமையான ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் செப்டம்பர் 11-ம் தேதி ஞாயிறு அன்று புதிதாகச் செய்யப்பட்ட கருடவாகனத்தில் உற்சவ மூர்த்தி திருவீதி கண்டருளினார்.
பஜனை, திவ்யபிரபந்த பாராயாணம், சாற்றுமறை, அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக செப்.,10-ம் தேதி சனிக்கிழமை நூதன கருட பிரதிஷ்டையும், ஊர்வலமும் நடைபெற்றது.
இத்திருத்தலத்தில் ஸ்ரீ அம்புஜவல்லிதாயார் சன்னதிக்கு அருகில் மகிமை வாய்ந்த ஸ்ரீ பத்மசக்கரம் பிரதிஷ்டையாகியுள்ளது. விசேஷமாகக் கருதப்படுகிறது. பிரதி பௌர்ணமி தோறும் சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் திருமண பிராப்தி வேண்டியும், மழலைப்பேறு வேண்டியும், கடன் நிவர்த்திக்கும், மன அமைதிக்கும் இந்த வைபத்தில் கலந்துகொண்டு பயணடைகின்றனர். வரும் வெள்ளிக்கிழமை செப் 16-ம் தேதி பத்ம சக்ர அபிஷேகம், பௌர்ணமி யாகம், பூஜை நடைபெறுகின்றது.
இது சம்மந்தமாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி - விஜயராகவன் (09087616111)