செய்திகள்

ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியர் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

தினமணி

பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோயிலில் பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் பிரம்ம தேவனை சிறையிட்டு நின்ற கோலத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி அருள்பாலிக்கிறார். மேலும் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகவும் இது விளங்கி வருகிறது.
இங்கு இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 24-ஆம் தேதி பச்சை மயில் வாகனம், 25-ஆம் தேதி தொட்டி உற்சவம், 26-ஆம் தேதி நாக வாகனம், 27-ஆம் தேதி பச்சை மயில் வாகனம், இரவு தேவசேனா திருமணக் காட்சி, 28-ஆம் தேதி விசித்திர தங்க நிற யானை வாகனம், 29-ஆம் தேதி ரத உற்சவம், 30-ஆம் தேதி தொட்டி உற்சவம், இரவு குதிரை வாகனம், மே 1-ஆம் தேதி வள்ளியம்மை திருமண வைபவம், மே 2-ஆம் தேதி தீர்த்தவாரி தொட்டி உற்சவம், இரவு துவஜா அவரோஹனம், மே 3-ம் தேதி தவன உற்சவம், மே 4-ஆம் தேதி உற்சவ சாந்தி அபிஷேகம், ஆஸ்தான உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT