செய்திகள்

மயிலாப்பூர் கபாலீசுவரருக்கு ரூ.2.75 கோடியில் தங்க நாகாபரணம்

தினமணி

சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் திருக்கோயில் மூலவருக்கு ரூ.2.75 கோடியில் தங்க நாகாபரணத்தை கோயில் தக்கார் பி. விஜயகுமார் ரெட்டி மற்றும் அப்பல்லோ மருத்துவமனை குழும துணைத் தலைவர் பி.பிரீத்தா ரெட்டி ஆகியோர் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாகும். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர்களால் பாடல் பெற்றது. உமையவள் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள புன்னை மரத்தின் கீழ் சாப விமோசனம் வேண்டி, சிவலிங்கத்தை பூஜித்து வழிபட்டதால் மயில் உருவாய் இருந்த பார்வதி தேவி சாப விமோசனம் பெற்று, சிவனை பங்குனி உத்திர நன்னாளில் திருமணம் செய்து கொண்ட தலமாகும். 
இத்திருக்கோயிலில் மூலவருக்கு இதுவரை சிறப்பு பூஜைகளின் போது தங்க முலாம் பூசப்பட்ட நாகாபரணம் அணிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோயில் தக்கார் பி. விஜயகுமார் ரெட்டி , அப்பல்லோ மருத்துவமனை குழும துணைத் தலைவர் பி.பிரீத்தா ரெட்டி ஆகியோர் சார்பில் ரூ.2.75 கோடி மதிப்பில் செய்யப்பட்ட சுமார் 7.5 கிலோ எடை கொண்ட தங்கத்தால் ஆன நாகாபரணம் தயாரிக்கப்பட்டு காணிக்கையாக வழங்கப்பட்டது.
இந்த நாகாபரணம் காஞ்சி சங்கராச்சாரியர் சுவாமிகள் முன்னிலையில் மூலவருக்கு வியாழக்கிழமை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் நட்ராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT