செய்திகள்

சிவ-விஷ்ணு கோயிலில் ஹயக்ரீவர் சிறப்பு பூஜை

DIN

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்காக, பூங்கா நகர் சிவ-விஷ்ணு கோயிலில் ஹயக்ரீவர் சிறப்பு யாக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூரை அடுத்த பூங்கா நகர் சிவ-விஷ்ணு கோயிலில், லட்சுமி ஹயக்ரீவருக்கு தனி சந்நிதி உள்ளது.
நிகழாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், மிகுந்த நினைவாற்றலுடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ளவும், சிறப்பான தேர்ச்சி பெறவும் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு யாகம், அபிஷேக பூஜைகள் நடந்தன.
மாலை 4.30 மணிக்கு சிறப்பு வேள்வி, நாம சங்கீர்த்தனம், மகா தீபாராதனை நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருள்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT