செய்திகள்

ஏழுமலையானுக்கு ரூ. 5 கோடியில் தங்க ஆபரணங்கள் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வழங்கினார்

தினமணி

திருப்பதி ஏழுமலையானுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ரூ. 5 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்களை புதன்கிழமை நன்கொடையாக வழங்கினார்.
தனித் தெலங்கானா மாநிலம் அமைந்தால் திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. 5 கோடி மதிப்பில் தங்க ஆபரணங்களை நன்கொடையாக வழங்குவதாக கடந்த 2010-ஆம் ஆண்டு தனித் தெலங்கானா போராட்டத்தில் ஈடுபட்ட தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் வேண்டுதல் நடத்தினார்.
பின்னர், 2014-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி தனித் தெலங்கானா மாநிலம் ஏற்பட்டு, அம்மாநிலத்தின் முதல் முதல்வராக சந்திரசேகர ராவ் பொறுப்பேற்றார்.
இதையடுத்து அவரது விருப்பப்படி, கோயம்புத்தூரில் உள்ள ஒரு தங்க நகை செய்யும் நிறுவனத்திடம் ரூ. 5 கோடி மதிப்பில் கண்டாபரணம் மற்றும் தாமரைப்பூ வடிவிலான சாளக்கிராம மாலை செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டது.
அந்த நகைகள் கடந்த வாரம் தயாரானதையடுத்து, அதனை சமர்ப்பிக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்தினர் மற்றும் சில அமைச்சர்களுடன் 2 தனி விமானங்களில் செவ்வாய்க்கிழமை மாலை திருமலைக்கு வந்தார்.
அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர். பின்னர், புதன்கிழமை அதிகாலை ஸ்ரீவாரி திருக்குளத்துக்கு சென்றுவிட்டு, வராக சுவாமியை தரிசித்த பின், ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார். அவரை கோயில் முன்வாசலில் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ஏழுமலையானைத் தரிசித்துவிட்டு திரும்பிய அவர், கோயிலுக்கு உள்புறம் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில்
ரூ. 5 கோடியில் 14.148 கிலோ எடையில் தாமரைப்பூ வடிவிலான சாளக்கிராம மாலை, 4.924 கிலோ எடையில் 5 வடத்தில் கண்டாபரணத்தை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கினார். அதனை தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
பின்னர் அவருக்கு வேத ஆசீர்வாதம் செய்து ஏழுமலையான் திருவுருவப் படம், சிறப்பு பிரசாதங்களை வழங்கினர். அவருடன் அவரது குடும்பத்தினர் மற்றும் சில அமைச்சர்கள் ஏழுமலையானைத் தரிசித்தனர். பின்னர், அவர் திருமலை புஷ்பகிரி மடத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டார். அதன்பின், காலை 11 மணிக்கு திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்தார். தாயாருக்கு வைர மூக்குத்தியை காணிக்கையாக வழங்கினார். பின்னர், ரேணிகுண்டா விமான நிலையம் சென்று தனி விமானம் மூலம் அவர் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT