செய்திகள்

ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி

DIN

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 முதல் 2.45 வரை உற்சவருக்கு மகா மண்டபத்தில் அலங்காரமும், 2.45 முதல் 4 மணி வரை மகாமண்டபத்தில் உற்சவருக்கு வைர அங்கி சேவையும் நடைபெற்றன. இதன்பின்னர், அதிகாலை 4 மணிக்கு பார்த்தசாரதி மகா மண்டபத்திலிருந்து உற்சவர் உட்புறப்பாடு தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, காலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு நம்மாழ்வாருக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள், "கோவிந்தா, கோவிந்தா' என கோஷமிட்டபடி தரிசனம் செய்தனர். இதையடுத்து, காலை 5 மணிவரை வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் நம்மாழ்வாருக்கும், 5 மணி முதல் 5.10 வரை பரமபத வாசலில் உபயதாரருக்கும் மரியாதை செய்யப்பட்டன.
இதன் பின்னர், காலை 5.10 மணி முதல் 5.45 வரை திருவாய்மொழி மண்டபத்தில் 3 சுற்றுகள் உற்சவர் உலா வந்தார். இதைதொடர்ந்து, திருவாய்மொழி மேல் மண்டபத்தில் உள்ள புண்ணிய கோடி விமானத்தில் வைர அங்கியுடன் உற்சவர் எழுந்தருளினார்.
காலை 5.45 மணிக்கு உற்சவரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கும் தரிசனத்தில் மேற்கு கோபுரம் வழியாக பொது தரிசனத்திற்கும், பின் வழியாக சிறப்பு தரிசனத்திற்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சிகளை சேவர்த்திகள் கண்டுகளிக்கும் வகையில், கோயிலுக்கு வெளியே கிழக்கு, மேற்கு பகுதிகளில் அகண்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகளும், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டன.
சிசிடிவி மூலம் கண்காணிப்பு: பாதுகாப்புக்காக நான்கு மாட வீதிகளிலும் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, சிசி டிவி மூலம் கண்காணிக்கப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம், கீதை சுலோகம் சாராம்சம், விஷ்ணு சகஸ்ரநாமம் நாமாவளி அடங்கிய புத்தகங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT