செய்திகள்

தேவராஜ சாமி கோயில் பிரம்மோற்சவம்

DIN

காஞ்சிபுரத்தில் உள்ள தேவராஜ சாமி கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி கடந்த 3-ஆம் தேதி முதல் ஸ்ரீசெல்வர் உற்சவம், அங்குரார்ப்பணம், ஸ்ரீசேனை முதன்மையார் புறப்பாடு, ஆழ்வார் திருநாள், சிறுபுண்ணியகோடி விமானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து தங்கச் சப்பரம், சிம்ம வாகனம், இரண்டாம் காப்பு, ஹம்ச வாகனம், சூரிய பிரபை சேவை ஆகியன நடைபெறுகின்றன.
வரும் 8-ஆம் தேதி காலை கருட சேவை கோபுர தரிசனமும், மாலையில் ஹனுமந்த வாகன வீதி உலாவும் நடைபெறும். பின்னர், சேஷ வாகனம், சந்திரபிரபை, தங்கப் பல்லக்கு, யாளி வாகனம், யானை வாகனம் சேவை நடைபெறுகின்றன.
ஜூன் 12-ஆம் தேதி திருத்தேர் வீதி உலா நடைபெறவுள்ளது. அதன் பின்னர், தொட்டி திருமஞ்சனம், குதிரை வாகனம், ஆல்மேல் பல்லக்கு, புண்ணியக்கோடி விமானம், வெட்டிவேர் சப்பரம், தீர்த்தவாரி ஆகிய நிகழ்வுகளுடன் ஜூன் 15-ஆம் தேதி அன்று பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர், விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT