செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

தினமணி

காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில் என்றழைக்கப்படும் தேவராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு திவ்யதேசங்களாக போற்றப்படும் வைணவத் திருத்தலங்கள் 108 ஆகும். இவற்றில் 15 வைணவத் திருத்தலங்கள் காஞ்சிபுரத்தில் உள்ளன. அவற்றில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயிலும் ஒன்று. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்தைத் தொடர்ந்து ஜூன் 15-ஆம் தேதி வரை 10 நாள் உற்சவம் நடைபெறுகிறது.
அதனை முன்னிட்டு ஜூன் 3-ஆம் தேதியில் இருந்து செல்வர் உற்சவம், அங்குரார்ப்பணம், ஸ்ரீசேனை முதன்மையார் புறப்பாடு, ஆழ்வார் திருநாள், சிறுபுண்ணியக்கோட்டி விமானம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து, தினமும் காலையில் அம்ச வாகனம், கருட சேவை, சேஷ வாகனம், தங்க பல்லக்கு, தங்க சப்பரம், திருத்தேர் உற்சவம் உள்ளிட்ட வாகனங்களில் உற்சவர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து தங்க சப்பரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்த ஸ்ரீதேவி,  பூதேவி சமேத வரதராஜ பெருமாள்.


மாலையில் சிம்ம வாகனம், சூரியபிரபை, அனுமந்த வாகனம், சந்திர பிரபை, யாளி வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், வெட்டிவேர் சப்பரம் ஆகிய வாகனங்களில் பெருமாள் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார்.
கருட சேவை, திருத்தேர்: விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை நிகழ்ச்சி வியாழக்கிழமை (ஜூன் 8) அதிகாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. இதனையொட்டி, அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 12-ஆம் தேதி கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் விஜயன் தலைமையிலான விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம் கம்பீருக்கு வெற்றுக் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT