செய்திகள்

கச்சபேஸ்வரர் கோயில் தெப்போற்சவம் நிறைவு

தினமணி

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் கோயிலில் 3 நாள் தெப்போற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
காஞ்சிபுரம் தாயார் குளத்தில் தெப்பத்தில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்தனர். காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தெப்ப உற்சவம் நடைபெறும்.
அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை கோயிலில் இருந்து புறப்பட்ட சுந்தராம்பிகை சமேத கச்சபேஸ்வரர் ராஜவீதி, காமராஜர், சாலை வழியாக தாயார் குளத்தை வந்தடைந்தனர்.
அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி குளத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இரண்டாம் நாளான சனிக்கிழமை குளத்தில் 5 முறையும், ஞாயிற்றுக்
கிழமை இரவு 7 முறையும் வலம் வந்தனர். இதில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பைஞ்ஞீலியில் வரலாற்று நிகழ்வு: அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT