செய்திகள்

திருத்தணி முருகன் கோயில் பக்தர்களுக்கு நீர் மோர், வெல்லம்

DIN

திருத்தணி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர்மோர், வெல்ல பானகம் வழங்கும் திட்டத்தை தமிழக அறநிலையத் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
திருத்தணி மலைக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்துச் செல்கின்றனர். இதுவரை இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் 114 டிகிரி செல்சியஸ் வரை திருத்தணியில் அதிகரித்தது. இதனால் நகர வாசிகள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவின் பேரில், திருத்தணி முருகன் மலைக் கோயிலில், பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் வெல்லம் பானகம் வழங்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கோயில் இணை ஆணையர் சிவாஜி தலைமை வகித்தார். கோயில் தக்கார் வே. ஜெய்சங்கர், நீர்மோர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
வெயில் காலம் முடியும் வரை கோயில் நிர்வாகம் சார்பில், தினமும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT