செய்திகள்

அம்மூர் கோயிலில் துரியோதனன் படுகளம்

ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் திரௌபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை, துரியோதனன் படுகளம், தீ மிதி விழா நடைபெற்றன.

தினமணி

ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் திரௌபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை, துரியோதனன் படுகளம், தீ மிதி விழா நடைபெற்றன.
இக்கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த 105 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அர்ச்சுனன் தபசு மரம் ஏறுதல் கடந்த
22-ஆம் தேதி நடைபெற்றது. 26-ஆம் தேதி கர்ண மோட்சம், 27-ஆம் தேதி பதினெட்டாம் நாள் போர் நாடகம் நடைபெற்றன.
அக்னி வந்த விழாவின் முக்கிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் படுகளமும், மாலை தீ மிதி விழாவும் நடைபெற்றது.
இதையொட்டி, அம்மூர், நரசிங்கபுரம், ரெட்டியூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக் கட்டி விரதமிருந்து தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை அம்மூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 24 வகையறாக்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து திங்கள்கிழமை தர்மர் பட்டாபிஷேக நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT