திருமலைப் பாதையில் மண்சரிவு
திருமலைப் பாதையில் வியாழக்கிழமை மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமலைப் பாதையில் வியாழக்கிழமை மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமலையில் கடந்த 4 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும் இரண்டாவது மலைப் பாதையின் இறுதி வளைவில், வியாழக்கிழமை காலை திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உடைந்து மலைப் பாதையில் விழுந்தன. அப்போது வாகனங்கள் ஏதும் மலைப் பாதையில் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அதேசமயம் பாறைகள் சாலையில் விழுந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மலைப் பாதையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, பாதையில் இருந்த பாறைகளை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.