செய்திகள்

பழனியில் இன்று கந்த சஷ்டி விழா தொடக்கம்

தினமணி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை (அக். 20) மதியம் உச்சிக்காலத்தின் போது காப்புக்கட்டுடன் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது.
இவ்விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்குகின்றனர். ஏழு நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் போது மலைக் கோயிலில் நாள்தோறும் தங்கச்சப்பரத்தில் சின்னக்குமாரசாமி புறப்பாடு, சண்முகர் தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்ச்சியாக அக். 25ஆம் சூரசம்ஹாரமும், அக்.26ஆம் தேதி வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகருக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. விழா நாள்களில் மலைக் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பழனிக் கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமையில், துணை ஆணையர் (பொறுப்பு) மேனகா மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT