செய்திகள்

திருவண்ணாமலையில் ஏப்ரல் 29-ல் சித்ரா பௌர்ணமி விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் சித்ரா பெளர்ணமி விழா வரும் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் சித்ரா பெளர்ணமி விழா வரும் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு வரும் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 640 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 28, 29, 30-ம் தேதிகளில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு 500, தாம்பரத்தில் இருந்து 100, அடையாறு, பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் இருந்து தலா 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 

மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப கூடுதலாகவும் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT